இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் நெல்சாகுபடி நடைபெற்றது. தற்போது நெல் அறுவடை நடைபெறும் நிலையில் 100 டன் வரை நெல் கொள்முதல் நடந்துள்ளது. மேலும் கடந்த 2023-24ல் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 2ம் கட்டமாக தற்போது ரூ. 20 கோடி நிவாரணம் வந்துள்ளது. அவை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.