

தேவிபட்டினம்: கடலில் கிடைத்த 12 அடி முருகன் வேல்
தேவிபட்டினம் கடலில் கருடன் வானத்தில் வட்டமிடும், கடலில் எலுமிச்சை பழம் மிதந்து வரும் அந்த இடத்தில் எனது உருவம் உள்ளது என கனவில் முருகன் தெரிவித்ததாக ஒருவர் கூற, அதன்படி மக்கள் சென்று பார்த்தபோது அவ்வாறே நிகழ்ந்துள்ளது. கடலில் 12 அடி ஆழத்தில் முருகன் உருவம் பொறித்த வேல் ஒன்று கிடைத்துள்ளது. இது தான் இன்றைய பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில். இங்கு சென்றால் உடல் காயங்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.