மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வலைச்சேரி பட்டியைச் சேர்ந்த சரவணன், இவர் காதலர் தினத்திற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பரமக்குடியில் வலம் வந்தார்.
நமது முன்னோர்கள் காலம் காலமாக நமது பண்பாடு, கலாச்சார நாகரிகங்களை பாதுகாத்து தொன்று தொட்டு தனி மனித ஒழுக்கத்துடனும், மனக்கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையானது உலக நாடுகளின் பார்வைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.
இந்த நிலையில் தற்போது காதலர் தினம் என்ற பெயரில் திருமணத்திற்கு முன்பே மேலைநாட்டு கலாச்சாரத்தினை பின்பற்றி கணவன், மனைவியாக வாழ்ந்து கொண்டு நம் பாரம்பரிய கலாச்சாரத்தினை சிதைத்து வருங்கால சந்ததியினருக்கு மோசமான வழிகாட்டியாகவும் திகழ்கிறார்கள்.
இன்றைய காலத்தில் காதலன் தன்னை எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி போலி ஆசை வார்த்தைகளை நம்பி உயிருக்கு இணையான கற்பை காதலி பரிசாக கொடுக்கவும் துணிந்து விடுகிறார்,
கடைசியில் காதலன் தன்னை திருமணம் செய்யாமல் கைவிட்டபின் வயிற்றில் வளரும் கருவை அழிக்க சற்றும் யோசிக்காமல் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
சிலர் குழந்தை பெற்ற பின்பு சாக்கடை கால்வாய், முள்செடிகளுக்குள் வீசி கொன்று விடுகின்றனர்.