சைகை மொழி தினம்: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

76பார்த்தது
சைகை மொழி தினம்: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்.,25) மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தை முன்னிட்டு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை
கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் செப்டம்பர் மாதம் 23. 09. 2024 முதல் 29. 09. 2024 வரை ஏழு நாட்களும் சர்வதேச காது கேளாதோர் மற்றும் சைகை மொழி வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளவில் சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் மாற்றுத்திறனாளிகளை சராசரி
மனிதனைப் போல சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் அரசு அலுவலகங்களில் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படையான மற்றும் அன்றாட தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான சைகை மொழி பற்றி அறிந்து கொள்வதற்கும் இவ்விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், காதுகேளாதோர் சங்கம் கூட்டமைப்பு பரமக்குடி அரசு கலை கல்லூரி விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி