சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுகி இவரது கணவர் 51 வயதுடைய இராஜபாண்டி இவர் சம்பவ நாளன்று தனது இருசக்கர வாகனத்தில் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தோளூர் தெற்கு பட்டிப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய குணசேகரன் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் இயக்கி மோதிய விபத்தில் ராஜபாண்டி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.