ராமநாதபுரம் மாவட்டம் உலையூரில் மண்டல மாணிக்கத்திலிருந்து மாடு மேய்க்கும் கிழவன் ஒருவரால் இந்த பரிவார தெய்வங்கள் இங்கு அழைத்து வரப்பட்டதாகவும் கிராமத்தில் ஆதி சிவன், ஆதி கருப்பன், தர்ம முனிஸ்வரர், மொட்டை இருளன், ராக்கட்சி, பைரவர், சோனை கருப்பண்ணசாமி, சிவகாளி கருங்காளி, ஆதி கிழவன், விநாயகர், முருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பலவித நறுமணப் பொருட்களால் மூலவருக்கு அபிஷேகம் மங்கள கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை வந்திருந்த பக்தர்கள் பலரும் மனம் உருகி வழிபாடு செய்தனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.