களிமண் குண்டுவில் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்.!

72பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த 'களிமண் குண்டு' கிராமத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர், காந்தாரியம்மன், சுப்பிரமணியர், தணிக்கைவேலன் இருளப்பசாமி, ஈஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக சூரிய பூஜையுடன் கூடிய சிறப்பு யாகசாலை நடத்தப்பட்டு மங்கல இசை முழங்க பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்தவாறு சிவாச்சாரியார்கள் கோவிலை வளம் வந்து பின் புனித நீரானது கோபுர உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு விமான கலசத்திற்கு கருடன் வானில் வட்டமிட்டபடியே அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீரானது பக்தர்களுக்கும் தெளிக்கப்பட்டது பின்னர் 11 வகையான திவ்ய திரவியங்களால் காந்தாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது பக்தர்கள் உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை வழிபாடுகளும் நடைபெற்றன இதனை அடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் அருள் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி