தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை அழைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள் சிலரையும் அழைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தவெக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில், செப்., 23ல் மாநாடு நடக்க உள்ளது. ஆனால், போலீஸ் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.