காவல்துறை வாகனங்களின் உதிரி பாகங்கள் பொது ஏலம்

82பார்த்தது
காவல்துறை வாகனங்களின் உதிரி பாகங்கள் பொது ஏலம்
சென்னை காவல்துறை அலுவலகத்தில் பழுது நீக்கம் செய்ய இயலாத பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் வரும் 10ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூர் சிபிசிஐடி வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றைய தினம் 4 மணிக்குள் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக ஏலத்தொகையை ரொக்கமாக செலுத்த வேண்டும். அதே போல், ஆதார் நகலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் 9952022860 / 9962488150.

தொடர்புடைய செய்தி