அரியகுடி புத்தூரில் உடைந்து போன கண்மாய்மடைகள் புலம்பும் கிராம மக்கள்
சீரமைக்க உதவி செய்யுமா மாவட்ட நிர்வாகம்
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி புத்தூர் பெரிய கண்மாயில் கடந்த ஒரு வருடங்களாக இரண்டு மடைகள் சிதிலமடைந்தும் செல்லரித்தும் மடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது கடந்த வருடம் கிராம நிதியிலிருந்து கண்மாயை சரி செய்து கிட்டத்தட்ட 550 ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது தற்போது இந்த சேதமடைந்த கண்மாய் மடைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினரிடமும் எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை என மக்கள் வேதனை தெரிவித்தனர் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பூக்கடம்பு இந்த கண்மாய் மடையை தற்போது சீரமைப்பு வேலை செய்யவில்லை என்றால் மழை பெய்தாலோ, ஆற்று நீர் வந்தாலோ, கிட்டத்தட்ட 550 ஏக்கர் நஞ்சை புஞ்சை விவசாய நிலங்களிலும் கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என தெரிவித்தார்