பரமக்குடியில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த செயினை அத்துப் பறித்துக் கொண்டு திருடன் தப்பி ஓடிய வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இளையான்குடி ரோட்டில் உள்ள சுப்பிரமணியன் தெருவில் இன்று மாலையில் நான்கு மணி அளவில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நாலரை மணி வரையிலும் ராகு காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக
இங்குள்ள மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டு பாரதி நகரில் உள்ள தனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சுப்பிரமணியன் தெருவில் சாலையில் நடந்து சென்ற பொழுது பெண்ணை பின் தொடர்ந்து திருடன் ஒருவன் நடந்து வந்தவன் அங்குள்ள மரத்தின் நிழலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது திடீரென கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அத்துக்கொண்டு பறித்து தப்பி சென்றான். பெண்ணின் அலறல் பல சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து திரண்டு வந்துள்ளனர் பரபரப்பான சூழ்நிலையில் சங்கிலி பறித்ததால் கழுத்தில் காயம் அடைந்த அந்த பெண் ‘தான் அணிந்திருந்தது கவரிங் சங்கிலி என்றும் அதனால் நான் வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு நடந்த சம்பவத்தை நினைத்து வேதனைப்பட்டு வீட்டுக்கு சென்றார்.