ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் உருவப் படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா, நகர் கழக செயலாளர் ஜமால், நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன், நகர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் திருமுருகன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.