பரமக்குடியில் இமானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழா

69பார்த்தது
பரமக்குடியில் உள்ள தனியார் மகாலில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டு பால் வளம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன், மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன், பரமக்குடி சட்டமன்ற முருகேசன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் , திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும் பொழுது சுதந்திரத்திற்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்று மூன்று மாதம் சிறையில் இருந்தார் எனவும் இந்திய தேசத்தை காப்பதற்காக ராணுவத்தில் பணியாற்றிய அவர் தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து சமூக நீதிக்காக போராடி களம் கண்டவர் என புகழாரம் சூட்டினார்.

பின்பு 72 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அமைச்சர் கயல்வலி செல்வராஜ் வழங்கினர். பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி