கர்நாடகாவில் 17 பற்களை இழந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனகோட்டே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (18) ஐ.டி.ஐ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் விபத்து ஒன்றில் 17 பற்களை இழந்தார். பற்களை இழந்த அவரை அக்கம்பக்கத்தினரும், உடன்படிக்கும் மாணவர்களும் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட விரக்தியில் இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரிக்கிறது.