மத்திய பல்கலைகளில், இளநிலை படிப்புகளுக்கான கியூட் (CUET) நுழைவுத் தேர்வு வரும் மே 8ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி 22ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் 2 நாட்கள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக இன்றைக்குள் (மார்ச் 24) துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.