ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் தேவா் சிலைக்கு மரியாதை!

5273பார்த்தது
கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவா் சிலைக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பா. ஜெயபெருமாள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்போம். மேலும் எனது சொந்த ஊா் முதுகுளத்தூா் தொகுதிக்குள்பட்ட புளியங்குடி கிராமமாகும் என்றாா் அவா்.

அப்போது, ராமநாதபுரம் அதிமுக மாவட்டச் செயலா் எம். ஏ. முனியசாமி, முன்னாள் அமைச்சா் மணிகண்டன், முன்னாள் பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா், முன்னாள் மக்களவை உறுப்பினா் அன்வர்ராஜா, கமுதி அதிமுக ஒன்றியச் செயலா்கள் எஸ். பி. காளிமுத்து (தெற்கு), ஆா். ராஜேந்திரன் (வடக்கு), கே. கருமலையான் (மேற்கு) உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி