தொடர்ந்து சரியும் தேசிய கட்சிகளின் எண்ணிக்கை

579பார்த்தது
தொடர்ந்து சரியும் தேசிய கட்சிகளின் எண்ணிக்கை
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இப்போது சுமார் 2,500 அரசியல் கட்சிகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

தொடர்புடைய செய்தி