தலைக்கவசம் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி..

80பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருவாய் துறை காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை பரமக்குடியை சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார். இப்பேரணியில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி நகரின் முக்கிய பகுதிகளான பெரிய பஜார், ஐந்து முனை ரோடு, ஆற்றுப்பாலம், கிருஷ்ணா தியேட்டர், வழியாக ராஜா மஹால் முன்பு நிறைவு பெற்றது.

தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வட்டாட்சியர் சாந்தி, பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, பார்த்திபனூர் காவல் நிலைய ஆய்வாளர் சுதா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.