முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சி.!

70பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் தற்போது தமிழக முழுவதும் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் தனித்துவம் பெற்று சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்பள்ளியில் கடந்த 1995 முதல் 1999 வரை பயின்ற மாணவ மாணவிகள் தங்களுடன் பயின்ற நண்பர்களை தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கி சங்கம நிகழ்ச்சி நடத்தி தங்களுக்கு கல்வி பயின்று கொடுத்த ஆசிரியர்களை கௌரவப்படுத்த வேண்டும் என திட்டமிட்டனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் அனைவரும் வருகை தந்து , தாங்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்து விளங்குவதற்கு காரணமாக இருந்து, தங்களுக்கு பள்ளிக் கல்வியே போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகள் மற்றும் பொன்னாடை அணிவித்ததும் மட்டுமன்றி அவர்களின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினர்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து வருகை தங்களது பள்ளி நண்பர்கள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாடி சென்றது அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி