நெல்லை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.