தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்று (மார்ச். 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார். அதன்படி மாநிலத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பள்ளிவாசல்களில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.