தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, நாளை (ஏப்ரல். 01) முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி மற்றும் தாம்பரம் - புழல் நெடுஞ்சாலையில் உள்ள சூரப்பட்டு சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.