சரக்கு மற்றும் சேவை வரி (GST) போர்ட்டலில் வரி செலுத்துவோருக்கு சிறப்புமிக்க பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய மாற்றங்கள் நாளை (ஏப்ரல். 01) முதல் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, multi-factor authentication (MFA) என்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல, 180 நாட்களுக்கு மேல் மிகாமல் உள்ள அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே E-Way Bills generate செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.