1980-ம் ஆண்டு ராஜீவின் சகோதரர் சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். அதுவரை அரசியலில் ஆர்வம் காட்டாத ராஜீவ் காந்தி, இந்திராவுக்கு உதவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பின்னர் தான் மிகவும் நேசித்த விமானி வேலையை துறந்து விட்டு, அரசியலில் பிரவேசித்தார். சஞ்சய் காந்தியின் சொந்த தொகுதியான அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர், நாட்டின் 6-வது பிரதமராக தனது 40வது வயதில் பதவியேற்றார்.