பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

73பார்த்தது
பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த கிர்ஸ்டி கில்மவுரை எதிர்கொண்டார். இதில் உலகக் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 46 நிமிடங்களே தேவைப்பட்டது. அடுத்த சுற்றில் கொரிய வீராங்கனை சிம் யு ஜின்-ஐ எதிர்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி