அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உடனடியாக, சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்று இனி எங்கும் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது X வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.