புதுகை, குமாரமங்கலத்தை சேர்ந்த கருணாநிதி (65) என்பவருக்கு திருமணமாகி 40 ஆண்டுகளான நிலையில் 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனையடுத்து இவர் நேற்று திடீரென விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.