புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆச்ச நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னக்காளை(55 வயது). இவர் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு மலைக்குடி பட்டியில் இருந்து ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது விராலிமலை இருந்து இலுப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதியதில் படுகாயம் அடைந்த சின்னக்காளை அதே இடத்தில் உயிரிழந்தார். இதுபற்றி இலுப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் திருவரங்குளம் அருகே தோப்பு கொள்ளை அருகே அதி வேகத்தில் சென்ற தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற வாலிபர் பலியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் பேருந்துகளால் மனித உயிர்கள் பறிபோவது வாடிக்கையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்று அதிவேகமாக வரும் பேருந்துகளை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுத்து மனித உயிர்களை காக்கும் படியும் அவர்கள் அரசனை கேட்டுக் கொண்டுள்ளனர்.