மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.,யிடம் இந்தியா படுதோல்வி

71பார்த்தது
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.,யிடம் இந்தியா படுதோல்வி
சார்ஜா, 9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. நேற்று (அக்.13) இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்தி