புதுக்கோட்டை: ஆதார் சேவை மையம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள துணை தபால் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக ஆதார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆதார் சேவை தபால் நிலையத்தில் மீண்டும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருமயம் தபால் நிலைய அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.