பொன்னமராவதி அருகே தூத்தூர் கிராமத்தில் உள்ள செல்வமுத்து விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து அனுஷ்டான, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.