பொன்னமராவதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தி வைப்பு
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் சின்ன அமரகண்டான் கரைப்பகுதியில் உள்ள கடைகள் நீர்நிலை புறம்போக்கில் வருவதாக கூறி வட்டாட்சியர் எம். சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, அலுவலர்கள், காவல்ஆய்வாளர் பத்மா மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர். கடை உரிமையாளர்கள் 'ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் கூடாது. கால அவகாசம் வேண்டும்' என கேட்டுக்கொண்டதால் ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்தி வைக்கப்பட்டது.