புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே தெற்கு ரத வீதியை சேர்ந்த கலியநாதன் மனைவி தனலட்சுமி 74. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இறந்தபின் தனது கண்கள் மற்றும் உடலை தானம் செய்வதாக பதிவு செய்து வைத்திருந்தார். அவரது விருப்பப்படி பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு திருச்சிக்கு கி. ஆ. பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.