
திருமயம்: ஜல்லிக் கற்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தொலையானூர் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி அழகு முன்னாள் ஊராட்சித்தலைவர். இவருக்கு சொந்தமான இடத்தில் ஜல்லிக்கற்கள், எம்.சான்ட் ஆகியவை குவித்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மருது, தாசில்தார் ராமசாமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது அனுமதி பெறாமல் அவை வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 16 யூனிட் ஜல்லிக்கற்கள், 272 யூனிட் எம்.சான்ட் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.