திருமயம் தாலுகா தெற்கு பொன்னம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(52). விவசாயி. முதல் மனைவி இறந்த நிலையில் 2வதாக முத்துலட்சுமி (35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களாக வெள்ளைச்சாமி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வருமானம் இல்லாததால் குடும்பத்தினர் சிரமப்பட்டு வந்தனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வெள்ளைச்சாமி விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.