புதுகை, நமணசமுத்திரம் மணவெட்டி கண்மாய் அருகே திருப்பத்தூர் அவினிப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் (23) என்பவர் திருப்பத்தூரில் இருந்து புதுக்கோட்டைக்கு பைக்கில் சென்றார். அப்போது அவருக்கு எதிரே நமணசமுத்திரம் கிளை சாலையில் பைக்கில் வந்த தினேஷ் (36) என்பவர் மோதியதில் சந்திரனுக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.