புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் பொறியியல் துறை சார்பில் கண்டியாநத்தம் முருகன் கோயில் அருகே உள்ள ஊரணி மற்றும் மாயன் ஊரணி ஆகியவை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இந்த பணியை கண்டியாநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் ஆய்வு செய்தார்.