மழை காரணமாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து

63பார்த்தது
மழை காரணமாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்துக்காக மதுரைக்கு வந்தார். முன்னதாக அவர், மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வந்து இங்குள்ள கோட்டை காலபைரவர் கோயில் மற்றும் சத்தியகோயில் மற்றும் சத்திய வாகீஸ்வரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வெள்ளிக்கிழமை மாலை 5. 20 மணிக்கு இறங்கும் வகையில், திருமயம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் இறங்கு தளமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, அந்தக் கோயில்கள் இருந்த பகுதி முழுவதும்காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாலை சுமார் 4. 50 மணிக்கு திருமயம் பகுதியில் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது.
அதேநேரத்தில் மதுரை விமான நிலையம் பகுதியிலும் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி