புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஜெ ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் பொன்னமராவதி - திருப்பத்தூர் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி படுகாயமடைந்தார். இதனையடுத்து அவர் துர்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.