தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தாமல் ஒரு குடும்பம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். இந்த திட்டத்திற்கான முக்கிய தகுதி ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களை www.cmchistn.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.