கல்லுாரி மாணவி மாயம்!

1063பார்த்தது
திருமயம் அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மெய்யப்பன். கூலித்தொழிலாளி. இவரது மகள் புவனேஸ்வரி(19). புதுகையில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவ த்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

இதுகுறித்து பெற்றோர் திருமயம் போலீசில் புகார் அளித்தனர். திருமயம் அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவரது 16 வயது மகள் 8ம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாய வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர் பாக சிறுமியின் தாயார் கல்யாணி திருமயம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி