இருசக்கர வாகனங்கள் மோதல்; சிறுவன் பலி

2225பார்த்தது
பொன்னமராவதி அருகே நெய் வேலி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (28). சம்ப வத்தன்று தனது இரண்டரை வயது மகன் தர்ஷனை அழைத்துக்கொண்டு அரசமலையில் பால்பண்ணைக்கு சென்று பால் வினியோகம் செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பினார். அப்போது பக்கவாட்டில் இருந்த மண்சாலையில் இருந்து வெள்ளகுடி கோபி என்பவர் ஓட்டி வந்த பைக், எதிர்பாராதவிதமாக கனகராஜ் பைக் மீது மோதியது.

அதே நேரத்தில் புதுக்கோட்டையில் இருந்து அரசமலை நோக்கி பழனிச்சாமி மனைவி மகாலட்சுமி (37) என்பவர் ஒட்டி வந்த மொபட்டும் கனகராஜ் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் தர்ஷன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான். மகாலட்சுமி, கனகராஜ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி