புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 4ஆம் நாள் மண்டகப்படி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கோயில் அருகில் உள்ள நகர விடுதியில் உள்ள விநாயகருக்கும், முருகன் வள்ளி தெய்வானைக்கும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. பின்பு சாமியை சப்பரத்தில் ஏற்றி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பலரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.