பொன்னமராவதியில் அனுமதி இல்லாத பார்களுக்கு சீல்!

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியில் அனுமதியின்றி செயல்படும் பார்களில் 24 மணி நேரமும் மது கிடைப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து பொன்னமராவதி கேசரப்பட்டி அருகே உள்ள ஒரு பார், செம்பொட்டல் அருகே உள்ள ஒரு பார் மற்றும் நகரப்பட்டியில் உள்ள ஒரு பார் என மூன்று பார்களை மூடி சீல் வைத்து பொன்னமராவதி காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் நடவடிக்கை எடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி