திருமயம் அருகே கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

78பார்த்தது
புதுகை, திருமயம் அருகே உள்ள அதிகாரிபட்டியில் கருப்பையா (55) என்ற நபர், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டார். அவரது உடலை திருமயம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு கிணற்றில் இருந்து மீட்டனர். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி