போதையில் குளித்தவர் கிணற்றில் மூழ்கி பலி

67பார்த்தது
திருமயம்: திருமயம் தாலுகா அதிகாரிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (55). விவசாயி. அதே ஊரில் இறந்த ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மது அருந்திய நிலையில் மயானக்கரை அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுபற்றி மனைவி மங்களம் அளித்த தகவலின் பேரில் திருமயம் தீயணைப்பு நிலைய மீட்பு படை யினர் கிணற்றில் இறங்கி கருப்பையா உடலை மீட்டனர். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி