புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஆயிங்குடியை சேர்ந்தவர் கந்தசாமி மகள் சந்தியா (21). பள்ளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளத்தூர் செல்வதாக கூறிச்சென்ற சந்தியா மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.