புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் டோல்கேட் அருகே குடிநீர் தொட்டியானது திறந்த நிலையில் உள்ளது. இதில், அவ்வப்போது கால்நடைகள் விழுந்து நீண்ட நேரம் தவிப்பிற்கு பிறகே அதன் சத்தங்கள் கேட்டு அதனை மீட்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே குழந்தைகளை பொதுமக்கள் அவ்வழியே அனுப்ப அச்சமடைவதாகவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் உடனடியாக இந்த குடிநீர் தொட்டியை மூடி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.