புதுக்கோட்டை டவுன்
டிஎஸ்பி ராகவி, நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
முதலிருப்பதாவது: புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் முன்னறிவிப்பு இன்றியும், அதிக உயரத்துடனும், அடையாளம் காட்டும் வகையில் வெள்ளைக் கோடுகள் இல்லாமலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 4ம் தேதி பஸ் நிலையத்தில்
இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள வேகத்தடையை கடந்தபோது விபத்தில் சிக்கி வெங்கடேஸ்வரன் (26) என்பவரும், ஏப்ரல் 7ம் தேதி பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள வேகத்தடையினால் விபத்தில் சிக்கி இன்ஸ்பெக்டர் பிரியா (45) என்பவரும் உயிரிழந்தனர். மேலும் பலரும் காயமடைந்து வருகின்றனர். அதிக உயரத்துடன், வெள்ளைக்கோடு இல்லாமலும் வேகத்தடை அமைத்த நகராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதைக் கண்காணிக்க தவறிய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகர் முழுவதும் உள்ள வேகத்தடைகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.