

திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் விரைவில் மேம்பாலம் அமைத்து தர பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில் வருவதற்கு முன்பு கேட் அடைக்கப்படுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மற்றும் பைபாஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் நீண்ட நேரமாக நிற்பதால் போக்குவரத்து நெரிசலும் பொதுமக்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.